நூருல் ஹுதா உமர்


தமிழ் மொழித் தினப் போட்டிகளில் 36 அரங்கப் போட்டிகளில் 14 முதலிடங்களை கல்முனை  கல்வி வலயம் முதலிடத்தினைப் பெற்றுள்ளது. அதில் நிந்தவூர் அஸ்-ஸபா வித்தியாலய எஸ்.எச்.அம்மார் ஆக்கத்திறன் வெளிப்பாடு (பிரிவு 1), மருதமுனை அல்-ஹம்றா மகா வித்தியாலய அப்துல் சமட் ஹயானி பேச்சு (பிரிவு 4), நிந்தவூர் அஸ்-ஸபா வித்தியாலய ஏ.எச்.ஹனீப் முகம்மட் பாவோதல் (பிரிவு 1), கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி அ.தேஷ்மி பாவோதல் (பிரிவு 3), கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி யு.அபர்ண சுவேர்தா பாவோதல் (பிரிவு-4), கல்முனை ஆர்.கே.எம். மகா வித்தியாலயம் சு.வேகாத்மி தனிஇசை (பிரிவு 2), கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி செ.லக்ஸ்விகா குழுஇசை- 1, க.வகஸ்தமி, சி.கேதுஜா, செ.லபோனிகா, பா.போட்சனா, சி.அபிரக்ஸினி, கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி சு.அகஸ்ரி தனிநடனம் (பிரிவு 3), கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி குழு நடனம், கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி நாட்டிய நாடகம், கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி வில்லுப்பாட்டு, நிந்தவூர் அல்-அஷ்ரக் முஸ்லிம் மகா வித்தியாலயம், தமிழறிவு வினாவிடை, நிந்தவூர் அல்-அஷ்ரக் முஸ்லிம் மகா வித்தியாலயம் முஸ்லிம் நிகழ்ச்சி, காரைதீவு சண்முகா மகா வித்தியாலயம் நவீன நாட்டுக்கூத்து ஆகியவற்றில் முதலிடத்தை பெற்றுள்ளது.

இப்போட்டிகளின் படி திருக்கோவில் கல்வி வலயம் 10 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தினைப் பெற்றுள்ளதுடன் தலா 6 இடங்களைப் பெற்று அக்கரைப்பற்று, சம்மாந்துறை ஆகிய கல்வி வலயங்கள் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளன. ஏற்கனவே நடந்து முடிந்த மாவட்ட மட்ட எழுத்தாக்கப் போட்டிகளில் 6 முதலிடங்களைப் பெற்ற கல்முனை கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 26 ஆம் திகதி திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் மாகாண மட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. அதிகமான முதலிடஙகளைப் பெற்று தேசிய மட்டத்திற்கு கல்முனை கல்வி வலயம் முன்னேற கல்முனை கல்வி வலயத்திற்கான தமிழ் மொழித் தினப் போட்டிகளின் தலைவராக இருந்து வழி நடத்திய வலயக் கலவிப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அவர்களுக்கு தமிழ் மொழிப் பிரிவின் சார்பில் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் தமிழ் மொழித் தினக் குழுவின் ஆலோசகர்- உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால், செயலாளர்- வளவாளர் ஜெஸ்மி எம்.மூஸா, இணைப்பாளர் க.குணசேகரம் ஆகியோருக்கும் மாணவர் தயார்படுத்தலில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்களுக்கும் மனம்நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக கல்முனை வலயக்கல்வி அலவலக தமிழ் மொழித் தின செயலாளர் தெரிவித்துள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours