உண்ணாவிரதம்
இருந்து உயிர் நீத்த தியாகி திலீபனுக்கு கல்முனையில் நினைவேந்தல்
நடாத்துவதற்கு உண்ணாவிரதமிருந்த ராஜனுக்கு, கல்முனை நீதிவான்
நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.
த.தே.கூட்டமைப்பின்
கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் கல்முனையில் உண்ணாவிரதம்
இருந்த உண்ணாவிரதியுமான சந்திரசேகரம் ராஜனுக்கு இந்த தடை உத்தரவை இரண்டு
போலீஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று கல்முனை
நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கல்முனை
போலீஸ் நிலையத்தில் இருந்தும், பெரிய நீலாவணை போலீஸ் நிலையத்திலிருந்தும்
இந்த தடைஉத்தரவு கோரி மன்றிடம் விண்ணப்பித்திருந்தது .
இவற்றை நேற்றுமுன்தினம் (25) திங்கட்கிழமை இரவு போலீசார் அவரிடம் கையளித்தார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours