(அஸ்ஹர் இப்றாஹிம்)


வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் மிக நீண்ட நாள் தேவையாகக்காணப்பட்ட (Dialysis Machine) டயாலிசிஸ் இயந்திரமொன்ற நாசிவன்தீவு ஈஸ்ட் லங்கா பொலிசெக் தனியார்  நிறுவனத்தின் பணிப்பளர் ஏ.எஸ்.முஹம்மது சனூன் அன்பளிப்புச் செய்துள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் நன்மைகருதி வழங்கப்பட்ட குறித்த இயந்திரத்தின் பெறுமதி சுமார் 3.1 மில்லியன் ரூபாய்களாகும். 

நன்கொடையாளரின் இக்குறிப்பிடத்தக்க பாரிய உதவியானது, நோயாளர்களுக்கும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பெரிதும் பயனளிக்கும் ஒன்றாகும். 

இந்த நன்கொடையினை  வழங்கியதற்காக மேற்படி நன்கொடையாளரக்கு மனப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதோடு, இவ்வுதவி கிடைப்பதில் உறுதுணையாக இருந்த மட்டக்களப்பு  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ.சுகுணன் அவர்களுக்கு சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக வாழைச்சேனை ஆதார  வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் மதன் தெரிவித்துள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours