காரைதீவு
போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரியினுடைய எழுத்து மூல கடிதத்தின் பிரகாரம்
காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் இலங்கை தமிழரசுக் கட்சி
காரைதீவுக்கிளை தலைவருமான ஜெயசிறில் கிழக்கு மாகாணம் குற்றத்தடுப்பு உளவு
பிரிவினரின் திருகோணமலை தலைமை காரியாலயத்தில் நேற்று முன்தினம் 9 மணி
யளவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
விசாரணை ஆரம்பமாகி மூன்றரை மணித்தியால நேரம் இடம் பெற்றது.
பின்னர் இது தொடர்பாக ஊடகங்களுக்கும் மக்களுக்கும் கருத்து தெரிவிக்கையில்.
என்
மீது கொழும்பு தலைமையகத்தில் இருந்து குற்றச்சாட்டுகள் பதிவாகி இருந்தது
பதிவு செய்யப்பட்டிருப்பதாக புலனாய் உளவுத்துறையினர் தெரிவித்தார்கள் .
இதில் உண்மைக்கு புறம்பான குற்றங்கள் சொல்லப்பட்டிருக்கின்றது . எனினும் .அதற்கான பதிலையும் வழங்கினேன்.
இந்த
நாட்டிலே ஜனநாயக ரீதியாக தமிழர்களுடைய இளைஞர் உரிமைக்காக குரல் கொடுத்து
செயல்படுகின்ற எங்களுடைய செயல்பாட்டை மழுங்கடிப்பதற்காகவும் மன
உளைச்சலுக்கு ஆளாக்கி எங்களை ஓரங்கட்டுவதற்காகவும் பல வருட காலமாக விசாரணை
நீதிமன்ற வழக்குகள் இடம் பெற்று வந்து கொண்டே இருக்கின்றது.
உண்மையில் எந்தவித பிழையும் செய்யாத நாங்கள் இவ்வாறான பெரிய குற்ற பிரிவுகளினால் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றோம்.
ஆனால்
பல குற்றவாளிகள் பதவிகளோடு அரசாங்கத்தின் அதிகாரத்தோடும் இன்று வெளியில்
உலாவிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் பாதுகாப்பை
கொடுத்துவிட்டு குற்றமில்லாத எங்களை குற்றவாளி போன்று துன்புறுத்துவதும் மன
உளைச்சலுக்கு ஆளாக்குவதும் இந்த அரச செயல்பாடு ஆகும்.
உண்மையிலேயே
ஈஷ்டர் குண்டு தாக்குதலில் கூட பல ஆவணம் இருக்கக்கூடிய பல ஆயுததாரிகள் பல
கொலை சம்பவங்களோடு தொடர்புபட்ட விடயங்கள் என்றும் பத்திரிக்கை வாயிலாகவும்
பாராளுமன்றத்திலும் பல சாட்சியளிக்கப்பட்டும் அவ்வாறானவர்களை வெளியில்
விட்டுவிட்டு எவ்விதமான குற்றங்களையும் செய்யாத எங்களுக்கு விசாரணை
செய்வது என்பது நாங்கள் இந்த இலங்கை நாட்டிலே துன்புறுத்தப்பட்டு வாழ்ந்து
கொண்டிருப்பது என்பது மனக்கவலை
.
எங்களுடைய
செயல்பாடு என்பது எங்களுடைய மக்களுக்காக தொடர்ச்சியாக செயல்படுவோம் எவ்வித
தடைகளும் வந்தாலும் எங்களுடைய மக்களுக்காக நாங்கள் பயணிப்பதற்கு இவ்வாறான
துன்புறுத்தல்களையும் சவாலாக எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருப்பதோடு
எங்களுக்கு இந்த நாட்டில் நீதி கிடைக்காவிட்டாலும் சர்வதேச நீதிக்காக
எங்களுடைய பயணம் தொடரும். என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours