( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு நேற்று முன்தினம் விஜயம் செய்தார்.
திருக்கோவில்
பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் அரச அதிபரை வரவேற்றார். அத்துடன் பல
கோடி ரூபாய் பெறுமதியான வேலைத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இவ் விஜயத்தின்போது திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவில் வாழும் 75 பேருக்கு காணி அளிப்பு பத்திரம் வழங்கிவைக்கப்பட்டது.
சமூர்த்தி பயனாளிகளுக்கு ஒருவருக்கு 10லட்சம் ரூபாய்வீதம் 10பேருக்கு 10மில்லியன் ரூபாய் ( 2 கோடி ருபாய்) வழங்கப்பட்டது.
மேலும்
சமூர்த்தி திணைக்களத்தினால் சமூர்த்தி பயனாளிகுடும்பங்களைசேர்ந்த 343
பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
நவீன
விவசாய விரிவாக்கல் திட்டத்தின் கீழ் உலர்மிளகாய் உற்பத்தி செய்வதற்காக
தங்கவேலாயுதபுரம் கிராமத்தை சேர்ந்த 05 பயனாளிகளுக்கு நீர் பம்பிகள் வழங்கி
வைக்கப்பட்டன ..
திருக்கோவில்
பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட நான்கு சிறுவர் விளையாட்டு
கழகங்களுக்கு 1லட்சம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள்
வழங்கீவைக்கப்பட்டது.
விநாயகபுரம்
பகுதியில் நன்னீர் மீன்வளப்பு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஏழு
தடாகங்களின் மீன்பிடிப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் எதிர்
கால நடவடிக்கை பற்றியும் ஆராயப்பட்டது..
திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள சமூர்த்திவங்கிகள் பார்வையிடப்பட்டது..
திருக்கோவில்
பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட கிராம சேவகர் காரியாலயங்களையும்
மேர்பார்வை செய்தார். மேலும் அம்பாறை மாவட்ட செயலாளருக்கு சமுர்த்தி
பிரிவினரால் பொன்னாடை போர்த்தி கௌரவமும் வழங்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours