நூருல் ஹுதா உமர்


மருதமுனை பைத்துல் ஹெல்ப் போ ரிலீப் அமைப்பின் சீருடை அறிமுகமும், கடந்த கால சேவைகள் அறிமுகமும், பரிசளிப்பும் அமைப்பின் தலைவர் எம்.எச். ரைசூல் ஹக்கீம் தலைமையில் மருதமுனை மருதூர் கொத்தன் கலையரங்கில் இன்று (17) நடைபெற்றது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்கள், வீடமைப்பு, குடிநீர் வழங்கள் , மின்சார இணைப்புகள், ஏழைகளுக்கான உதவி திட்டங்கள், வலது குறைந்தோர் உதவி வேலைத்திட்டங்கள், கல்வி மேம்பாட்டுப் பணிகள், அனர்த்த கால உதவிகள் என பல்வேறு பணிகளை முன்னின்று செய்துவரும் இந்த அமைப்பின் உத்தியோகபூர்வ மேலங்கியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெளியிட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், கல்முனை பிரதேச செயலாளர் ஜெ. லியாக்கத் அலி, திடீர் மரண விசாரணை அதிகாரி அல் ஜவாஹீர், நில அளவையாளர் ஏ.ஆர். நைசர்கான், ஸ்ரீ.ல.மு.கா. பிரமுகர்கள், மருதமுனை பைத்துல் ஹெல்ப் போ ரிலீப் அமைப்பின் ஆலோசகர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள், மதரஸா மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மதரஸா மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours