(அஸ்ஹர் இப்றாஹிம், எம்.எம்.ஜெஸ்மின்)

கல்முனை ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறை ஆகிய இடங்களில் இயங்கி வரும் கிளை வைத்தியசாலைகளின் ஒரு வருட பூர்த்தியினை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாம் இன்று (5) கல்முனை இலங்கை போக்குவரத்து சாலை அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இலங்கை போக்குவரத்து சாலையிலும், பிராந்திய சாலையிலும் கடமையாற்றும் உத்தியோஸ்தர்களும் ஊழியர்களும் கலந்து கொண்ட இந்த வைத்திய முகாமில்  
குருதியில் சீனியின் அளவு, உடற்பருமன் சுற்றளவை கணித்தல்,  குருதி அழுத்தம்,  குருதியில் ஒட்சிசனின் அளவை அறிதல்,  கண் பரிசோதனை போன்றவற்றிற்கான சிகிச்சையும், உடற்பயிற்சி,  உணவு பழக்கவழக்கம் சம்பந்தமான ஆலோசனை, நீரழிவு, பக்கவாதம், நாட்பட்ட நோய்கள் சம்பந்தமான ஆலோசனைகளும் அவற்றிற்கான தீர்வும் இந்த மருத்துவ முகாமின் போது வழங்கப்பட்டன. 

இம் மருத்துவ முகாமில் கல்முனை ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை உத்தியோஸ்தர்கள்,  ஊழியர்கள், வைத்தியர்கள்,  தாதி உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours