( வி.ரி. சகாதேவராஜா)
அத்துடன் நான் வைத்திய நிபுணராக வெளிவந்ததும் ஏழை எளிய மக்களுக்கு நிச்சயம் இலவசமாகவே தன்னுடைய சிகிச்சை அளிப்புக்களை செய்வேன் என்று
நிந்தவூரின் வரலாற்றில் முதல் தடவையாக வைத்திய துறைக்கு தெரிவான முதல் தமிழ் மாணவி குணசேகரம் ஜனுசிகா தெரிவித்தார்.
சாதனை
மாணவி ஜனுசிகாவை பாராட்டி பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு ஏற்பாடு
செய்த கௌரவிப்பு விழாவில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிந்தவூர்
அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து வைத்தியத்துறையில் கால் பதிக்கும்
குணசேகரம் ஜனுசிகாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (6)
இடம்பெற்றது
நிந்தவூர்
பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் ஐ எம்
.நிஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் பிரதம அதிதியாக கலந்து
சிறப்பித்தார்.
கௌரவ
அதிதிகளாக நிந்தவூர் கோட்டக் கல்வி பணிப்பாளர் எம் சரிபுத்தீன், நிந்தவூர்
அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் அதிபர் ஏ அப்துல் கபூர், பெஸ்ட் ஒப் யங்
அமைப்பின் செயலாளர் ஏ புஹாது, ஆகியோர் கலந்து கொண்டனர் .
நிந்தவூரின்
வரலாற்றில் முதல் தடவையாக வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது
தமிழ் மாணவி என்ற வரலாற்று பதிவை தனதாக்கி கொண்டுள்ள ஜனுஷிகாவை பாராட்டி
நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம்
மற்றும் பரிசில் வழங்கி கௌரவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours