கல்வி
அமைச்சினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக் கிடையிலான தேசிய மட்ட
தைக்வொண்டோ சுற்றுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள்
01 வெள்ளி மற்றும் 02 வெண்கலம் உற்பட 03 பதக்கங்களை பெற்று சாதனை
நிலைநாட்டியுள்ளனர்.
செப்டெம்பர்
மாதம் 16,17,18 ஆகிய தினங்களில் இரத்தினபுரி உள்ளக விளையாட்டரங்கில் கல்வி
அமைச்சினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக் கிடையிலான தேசிய மட்ட
தைக்வொண்டோ சுற்றுப் போட்டியில் மேற்படி வெற்றி வாகை சூடப்பட்டது.
இதில்
20 வயதுக்குற்பட்ட ஆண்களுக்கான ஸ்பாறிங் (sparring) நிகழ்ச்சியில் ஜே.ஏ.
ஸுறைப் வெள்ளிப் பதக்கமும், ஏ.வி.றஸா அஹமட், ஆர்.எம்.அக்தாஸ் ஆகியோர்
தத்தமது எடைப் பிரிவுகளில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.
இதில் ஜே.ஏ.ஸுறைப் தொடர்ந்து 2 வது முறையாக தேசிய ரீதியில் வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்துள்ளார்.
சென்ற
வருடம் இப்பாடசாலை அணி 14 புள்ளிகளை பெற்று அகில இலங்கையில் ஒவரோல்
போய்ஸ் சம்பியனாக (Overall Boys champion) ஆக தெரிவு செய்யப்பட்டனர்.
இவ்
வெற்றியை பெற உதவிகளையும், மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து
ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர்
மற்றும் இணைப்பாட விதானத்திற்கு பொறுப்பான உதவி அதிபர்
எம்.எச்.எம்.அபூபக்கர், அர்ப்பணிப்புடன் தமது திறமைகளை வெளிப்படுத்தி
இவ்வெற்றிகளை பெற்ற மாணவர்களையும், மாணவர்களை பயிற்றுவித்த உடற்கல்வி
ஆசிரியர் யு.எல்.எம்.இப்றாஹீம் (Coach) அவர்களையும், உதவி
பயிற்றுவிப்பாளர்களான ஏ.ஏ. சிஹாப், எம்.எச்.ஏ.ஹஸீன், ஜே.ஏ.ஸுமைட் ,
விளையாட்டு பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம்.அமீர், உடற்கல்வி பிரிவு
ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட மாணவர்கள் என்
எம்.நுஸ்ரி, ஜே.ஏ.ஜஹீஸ், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள், ஆகியோரையும்
பாடசாலை சமூகம் தமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
Post A Comment:
0 comments so far,add yours