(அஸ்ஹர் இப்றாஹிம்)
மக்கள் வங்கி விளையாட்டு விளையாட்டு சம்மேளனம், இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள மக்கள் வங்கி கிளைகளில் பணியாற்றும் உத்தியோஸ்தர்களுக்கிடையில் சுகதாச உள்ளக அரங்கில் வலைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டம் ஆகிய போட்டிகளை ஒழுங்குசெய்திருந்தது.
கரப்பந்தாட்டப் போட்டியில் 24 குழுக்கள் பங்கேற்ற நிலையில் நுவரெலியா மக்கள் வங்கி கிளை சம்பியன்களாகவும், தலைமைக் கிளை இரண்டாம் இடத்தையும், வலைப்பந்தாட்டத்தில் 14 குழுக்கள் பங்கேற்ற நிலையில் தலைமைக் காரியாலயம் சம்பியன்களாகவும், கேகாலை மக்கள் வங்கி கிளை இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் பிரதி பொது முகாமையாளர் நிபுனிகா விஜயரெட்ண பிரதம அதிதியாக கலந்து கொண்டார் .
Post A Comment:
0 comments so far,add yours