(வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை
நகர லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் " நாளைய தொடுவானத்திற்கு வழி
செலுத்துதல் "எனும் தலைப்பில் இலவச கருத்தரங்கு நேற்று(10) ஞாயிற்றுக்கிழமை
காரைதீவு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
கல்முனை
நகர லயன்ஸ் கழக தலைவர் லயன் எந்திரி எம் சுதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்த
நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின்
செயலாளர் லயன் கலாநிதி எம். கோபாலரெத்தினம் கலந்து சிறப்பித்தார்.
தொழில் முனைவோர் மற்றும் உயர்கல்விக்காக காத்திருப்போர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டார்கள் .
அங்கு சாதனையாளர்களின் அனுபவப் பகிர்வு மற்றும் வளவாளர்களின் கருத்துக்கள் என்பன வழங்கப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours