(சுமன்)
எந்த சந்தர்ப்பத்திலும் எமது ஒற்றுமை
சீர்குலையக் கூடாது என்று கருதுபவன் நான். ஏனெனில் அவ்வாறு ஒற்றுமை
சீர்குலைக்கப்படுமானால் கிழக்கில் தமிழர்களின் நிலை மோசமாகும். அதிலும்
அதிகம் பாதிக்கப்படப் போகின்ற மாவட்டங்களாக அம்பாறை திருகோணமலை மாவட்டங்களே
இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ள வேண்டும் என தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா
கலையரசன் தெரிவித்தார்.
பாண்டிருப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்
அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டிலே தமிழ்
மக்களைப் பெருத்தவரையில் ஒற்றுமை என்ற விடயத்தில் மிகவும் ஆபத்தான நிலையில்
இருக்கின்றோம். அரசியல்வாதிகளிடமும் இல்லை, மக்களிடமும் இல்லை என்ற
ரீதியில் அழிவின் விழிம்பில் நின்றுகொண்டிருக்கின்றோம். இந்தியாவிலே சுமார்
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக இருக்கின்றார்கள்.
புலம்பெயர் தேசங்களிலே இலங்கைத் தமிழர்கள் சுமார் இருபது இலட்சம் பேர் வரை
வாழ்கின்றார்கள். இந்த நிலையில் இங்கு எமது எதிர்காலம் எங்கே போய்
முடியும். கிழக்கு மாகாணத்திலே விகிதாசாரத்தில் முஸ்லீம்கள் மார்தட்டிப்
பேசுகின்றார்கள். இந்;தநிலை நீடித்தால் எதிர்காலத்தில் கிழக்கு மண் எமது
கைகளில் இருந்து விடுபடக் கூடிய வாய்பப்புதான் இருக்கின்றது.
தமிழ்
மக்களாகிய நாங்கள எவ்வாறு இந்த நாட்டிலே வாழப்போகின்றோம் எமது மக்களுக்கான
தீர்வு என்ன என்ற விடயத்திலே நாங்கள் தொடர்ச்சியாகப் பயணித்துக்
கொண்டிருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ரீதியில் செயற்படும்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எதிர்காலத்திலும் ஒருமித்துச் செயற்படும்
அந்த ஒற்றுமையை நாங்கள் பலப்படுத்துவோம். எந்த சந்தர்ப்பத்திலும் அந்த
ஒற்றுமை சீர்குலையக் கூடாது என்று கருதுபவன் நான். ஏனெனில் அவ்வாறு அந்த
ஒற்றுமை சீர்குலைக்கப்படுமானால் கிழக்கில் தமிழ் மக்கள் பெரும் பாதிப்பினை
எதிர்கொள்வார்கள். அதிலும் அதிகம் பாதிக்கப்படப் போகின்ற மாவட்டங்களாக
அம்பாறை திருகோணமலை மாவட்டங்களே இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் விளங்கிக்
கொள்ள வேண்டும்.
தேர்தல் முறைமை காரணமாக சில சில நடைமுறைகள்
மேற்கொள்ளப்பட்டன. அந்த அடிப்படையில் எம்முடன் இணைந்திருந்த கட்சிகள் புதிய
கட்சியொன்றை அமைத்திருக்கின்றார்கள். அது நீடிக்கப் போகின்ற விடயம் அல்ல.
மீளவும் நாங்கள் கூட்டாக ஒற்றுமையாகச் செயற்படுவோம். அவ்வாறில்லாவிட்டால்
கிழக்கில் தமிழ் மக்களே மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுவோம்.
Post A Comment:
0 comments so far,add yours