வரலாற்றுப்
பிரசித்தி பெற்ற ஓந்தாச்சிமடம் அரசடி விநாயகர் ஆலய பிரதிஷ்டா மகா
கும்பாபிஷேகம் இன்று ஆறாம் தேதி புதன்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகிறது.
9 ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் எண்ணைய்க்காப்பு சாத்தும் நிகழ்வு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இடம் பெறும் .
தொடர்ந்து 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சுபமுகூர்த்த வேளையில்
மகா கும்பாபிஷேகம் இடம் பெற இருக்கின்றது.
தொடர்ந்து
12 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று 21ஆம் தேதி வியாழக்கிழமை 1008
சங்குகளுடன் கூடிய சங்காபிஷேகமும் வீதியுலாவும் இடம்பெறும் .
பிரதிஷ்டா
பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தமூர்த்திக் குருக்கள் தலைமையிலான
சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேக கிரியைகளை தொடர்ந்து மேற்கொள்வார்கள் என்று
ஆலய பரிபாலன சபையின் தலைவர் த.சற்குணானந்தன் செயலாளர் வி.காந்தகுமார்
ஆகியோர் தெரிவித்தார்கள்
Post A Comment:
0 comments so far,add yours