(பாறுக் ஷிஹான்)


 

போதைப்பொருள் கடத்தல் வர்த்தகம் தொடர்பில் ஏற்பட்டுள்ள  அச்சுறுத்தலை அனைவரும் ஒன்றிணைந்தே இல்லாமல் செய்ய வேண்டும் என கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர்  தெரிவித்துள்ளார்.



பொலிஸ் ஆலோசனை  குழுக்கூட்டத்தில் இன்று  கலந்துகொண்டு உரையாற்றும்போதே   இதனைத் தெரிவித்தார்.

  இந்நிலையில் இங்கு அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது

 போதைப்பொருள் உள்ளிட்ட  கேரள கஞ்சா கடத்தல் நடவடிக்கையானது அதிகளவாக இடம்பெறுகின்ற பகுதியாக கல்முனை பிராந்தியம் காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் இந்த பகுதியில் திறமையாக கடமையாற்றுகின்ற பொலிஸார் இக் கடத்தல் முயற்சிகளை பெரும்பாலும் முறியடித்து விடுகின்றார்கள். இது வரவேற்கதக்க ஒன்றாகும்.



இத்தகைய கஞ்சா பாவனையானது வெளிநாடுகளில்  இருந்து கடல்மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு இங்கே விற்கப்படுகின்றது. இவற்றினூடாக இவற்றுக்கு அதிகளவான இளைஞர்கள் அடிமையாகியுள்ளார்கள்.

இவற்றைவிட தற்போது இலங்கை மேலும் பாரிய போதைப்பொருள் கடத்தலுக்குள் சிக்கி யுள்ள அபாயத்தை அடைந்துள்ளது.

அதாவது கொக்கையின் போதைப் பொருள் கடத்தல் நட வடிக்கையானது இலங்கைக்கு ஊடாக அதிகரித்துள்ளது. இரு்ந்த போதிலும் அந்தக் கடத்தல் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளன.

கொக்கையினானது கேரள கஞ்சாவினை விடவும் அதிக மடங்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்த கூடிய ஒன்றாகும். எனவே இவ்வாறான சட்டவிரோத செயல்களை முறியடிப்பதற்கு   அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறாயின் அதனை சாத்தியமாக்க முடியும்.   எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours