சைவத் தமிழர்களின் தொன்மைகளையும், விஞ்ஞான மெய்ஞான தொடர்புகளையும் ஆலயங்கள், அறநெறிப்பாடசாலைகள், சமய நிகழ்வுகளில் போதித்து சமூகத்தை நன்நெறிப்படுத்தும்  ஆன்மீக சொற்பொழிவுகளை கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் கடந்த சில மாதங்களாக நிகழ்த்தி வருகிறது.

மிகவும் உத்வேகத்துடன் செயற்பட்டு வரும் இவ் அமைப்பினை இன்னும் பலப்படுத்தி செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கான நிருவாக கட்டமைப்பை உருவாக்கும் கூட்டம் கல்முனை தரவை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம் பெற்றது.

இதன் போது ஒன்றியத்தின் தலைவராக  சிவஸ்ரீ க.வி.பிரமீன் சர்மா அவர்களும்

பொதுச்செயலாளராக சிவத்திரு தினேஸ்குமார் அவர்களும் 

பொருளாளராக சிவத்திரு மோகன் அவர்களும்

அம்பாறை மாவட்ட உப தலைவராக சிவத்திரு லக்குணம் 

உப செயலாளராக சிவத்திரு தமிழகரன் சனாதனன் 

இணைப்பாளராக சிவத்திரு பிரதீபன் அவர்களும் சபையினால் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டனர். 

கடந்த ஆலய உற்சவ காலத்தின் போது கிழக்கு மாகாணம் தாண்டி வடமாகாணத்திலும் பல ஆலயங்களிலும் ஒன்றியத்தினால் சொற்பொழிவுகள் இடம்பெற்றிருந்தன. தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள நிர்வாக கட்டமைப்பை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்திற்கும் விஸ்தரிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதுடன் இந்த நல்ல செயலை ஆரம்பிக்கும் முகமாக ஆலய வளாகத்தில் ஒன்றியத்தினால் மரக்கன்றும் நடுகை செய்யப்பட்டது. இதில் தன்னார்வமாக இணைந்து செயற்பட சகல சொற்பொழிவாளர்களையும் சமூக செயற்பாட்டாளர்களையும் அழைத்து நிற்கின்றனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours