( வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை ரொட்டரிக்கழகம், அவுஸ்ரேலிய Global Hand Charity அமைப்பின் அனுசரணையுடன் 1000 மூக்குக் கண்ணாடிகளை இலவசமாக வழங்கவுள்ளது.

 கண்ணாடிக்கான தேவையிருந்தும் அதனைப்பெற்றுக்கொள்ள வசதியில்லாத வறுமைக்கோட்டின் கீழ் இருக்கின்றவர்களுக்கு இக்கண்ணாடிகள் வழங்கப்படும் என்று கல்முனை ரோட்டரி கழக பிரமுகர் ரோட்டரியன் மு. சிவபாதசுந்தரம் தெரிவித்தார்.

ஏற்கனவே கண்ணை பரீடசித்து மருத்துவ சீட்டினை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இவேலைத்திட்டமானது 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 26,27ந் திகதிகளில்  கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில்   அவுஸ்ரேலிய  வைத்தியர்களினால் கல்முனை கண் வைத்தியர்களின் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்படும்.

இவ்வேலைத்திட்டம் குறிப்பாக கரையோர பிரதேசத்தை சார்ந்த 13  பிரதேச செயலக பகுதிகளை உள்ளடக்கியதாகும்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours