நூருல் ஹுதா உமர்
இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்ட அழகிய இலங்கை தேசத்தில் மரங்களை வளர்ப்பதன் மூலம் காலநிலையை சீராக பேண முடியும். இயற்கை வளங்களை அழிப்பதன் மூலம் நாடு மட்டுமல்ல நாமும் சீரழிந்துவிடுவோம். இறைவனின் படைப்பில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகும் பயனும் என்றால் மரம் அதன் உச்ச வடிவம். மரங்களை வெட்டுவதால் எமது எதிர்காலத்தை நாமே பழுதாக்கி கொள்வதற்கு ஒப்பானதாகும் என இலங்கை அடிப்படை மனித உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எம்.ஏ. நளீர் தெரிவித்தார்.
இயற்கையை நேசித்து சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ அவர்களின் எண்ணத்தின் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை நிகழ்வு இன்று (21) மத்திய முகாம் நகர லும்பினி பௌத்த விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமித் தேரர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
200 மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டத்தை தொடக்கிவைக்கும் வகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை அடிப்படை மனித உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எம்.ஏ. நளீர், மத்திய முகாம் பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எம். கபூர், மத்திய முகாம் பொலிஸ் பிரிவின் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர் எம்.எச். லத்திப் ஹாஜி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours