(வி.ரி.சகாதேவராஜா) 

பெரன்டினா நிறுவனத்தின் அனுசரணையுடன்,
வீட்டு மனைபொருளாதாரத்தை உயர்த்த 200 பழமரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 20  பயனாளிகளுக்கு அவர்களின் வீட்டு மனை பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் பழ மரக்கன்றுகளை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகியின் வழிகாட்டலுக்கு அமைய உதவிப் பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன் தலைமையில் விதாதா வள மத்திய நிலையத்தில் (23) இந் நிகழ்வு நடைபெற்றது.

பெரன்டினா நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெரன்டினா நிறுவனத்தின் முகாமையாளர் கோ.கோபிகரன், வியாபார  அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெயரூபன் கலந்து கொண்டனர்.
அதேவேளை,விவசாய உத்தியோகத்தர் திருமதி.சமேதா கீர்த்தனன் வீட்டு பொருளாதாரத்தை உயர்த்தும் வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தார்.

இந்த நிகழ்வில் விதாதா வெளிக்கள இணைப்பாளர் கே.நவநீதன், சுற்றாடல் உத்தியோகத்தர் கே.சிறீகரன், கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.ஷினாஸ், கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.பிரசன்னா உட்பட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெரன்டினா நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours