எஸ்.சபேசன்

எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினால் பட்டிருப்பு கல்வி வலயத்தின் சர்வதேச சிறுவர் தின விழாவினை சிறப்பிக்கும் வகையில் 300 மாணவர்களுக்கான பரிசுப் பொதிகள் பட்டிருப்பு கல்வி வலயத்தின் வலயகல்விப் பணிப்பாளர் திரு.சி. சிறீதரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

 பட்டிருப்பு வலயகல்வி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த இந்த நிகழ்வில் எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபக தலைவரும் சமூக சேவகருமான அ. வசீகரன் ஆலோசகரும் ஓய்வு பெற்ற திடீர்மரண விசாரணை அதிகாரியுமான ச. பேரின்பநாயகம் செயலாளர் இ. ஜீவராஜ் பொருளாளரும் கல்முனை கல்வி வலயத்தின் சித்திர பாட வளவாளருமாகிய பொ. புஸ்பநாதன் மற்றும் வலயகல்வி அலுவலகத்தின் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்இதற்கான அனுசரணையினை எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஸ்தாபக தலைவரும் சமூக சேவகருமான அ. வசீகரன் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours