(வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில்
பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வுபெறும் இராசையா
கணேசமூர்த்தியை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் பிரதேச செயலாளர்
தங்கையா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
காரைதீவைச்
சேர்ந்த கணேசமூர்த்தி வவுனியாவில் முகாமைத்துவ உதவியாளர் சேவையில் இணைந்து
பின்னர் நாவிதன்வெளி கல்முனை வடக்கு பிரதேச செயலகங்களில் பதில் நிருவாக
உத்தியோகத்தராக பணியாற்றி சுப்பரா பரீட்சையில் சித்தி பெற்று திருக்கோவில்
பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தராக இறுதியில் பணியாற்றினார்.
Post A Comment:
0 comments so far,add yours