ஒரே நாளில் யானை தாக்கி 4 இடங்கள் சேதமடைந்துள்ள சம்பவம் ஒன்று இன்று (11) அதிகாலை அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள சம்மாந்துறை 08 கிராம சேவையாளர் பிரிவில் இடம்பெற்றுள்ளதுடன்
தனியான் யானை ஒன்று வந்து சென்றாதாக அப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இதன்போது காட்டு யானை அப் பிரதேசத்தில் உள்நுழைந்து பயன்தரும் வாழை, பயிர்களை சேதப்படுத்தி உள்ளதுடன் வீட்டின் சுவர்களும் உடைக்கப்பட்டு வீட்டில் உள் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் மூட்டைகளும் சேதப்படுத்தப்படுத்தப்பட்டுள் ளது.
மேலும் இந்த வருடம் காட்டுயானை தாக்குதலுக்கு உட்பட்டு 3 நபர்கள் உயிரிழந்துடன் முதலை தாக்குதலுக்கு உட்பட்டு ஒரு நபரும் உயிரிழந்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours