(எம்.ஏ.றமீஸ்) 

தேசிய அரச சார்பற்ற ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இம்முறை வெளியான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அமைப்பின் தலைவர் எஸ்.எம்.லாபீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். 
இதன்போது உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் ஏ தரச் சித்தி பெற்ற அம்பாறை மாவட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள், அரபுக் கல்லூரி மாணவர்கள் 200 பேர் பெறுமதி மிக்க நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதேவேளை மாணவர்களின் கலை கலாசார பாரம்பரிய அம்சங்கள் இதன்போது மேடையேற்றப்பட்டதுடன், கல்வியின் முக்கியத்துவம் தொடர்பில் பல்வேறு கருத்துரைகளும் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 இந்நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ், எம்.எஸ்.சஹூதுல் நஜீம்,  எஸ்.எம்.எஸ்.எம்.உமர் மௌலானா, எஸ்.உதயக்குமார் உள்ளிட்ட கல்வியலாளர்கள், துறைசார் உயர் அதிகாரிகள் போன்றோர் இதன்போது அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours