(எம்.எம்.றம்ஸீன்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களின் பொறுப்பு வைத்திய அதிகாரிகளுக்கான மருத்துவ ஆய்வு, ஆராய்ச்சி மற்றும் முன்மாதிரியான சிகிச்சைகள் தொடர்பான (Workshop on Clinical Audit, Research and Best practices) செயலமர்வொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பொதுச் சுகாதார மற்றும் தர முகாமைத்துவ பிரிவின் வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.எம்.ஹில்மி அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த செயலமர்வு திட்டமிடல் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பணிமனையின் பிரிவு தலைவர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச வைத்திய அதிகாரிகள், ஆரம்ப பராமரிப்பு சுகாதார பிரிவுகளின் பொறுப்பு வைத்தியர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ், பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.பீ.அப்துல் வாஜித் ஆகியோர் சூம் தொழிநுட்பத்தின் ஊடாக குறித்த நிகழ்வில் உரை நிகழ்த்தினர்.
பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.எம்.ஹில்மி, சுற்றுச் சூழல் தொழில் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்புப் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌஸாத் ஆகியோர் இதன் போது வளவாளர்களாக கலந்துகொண்டு விரிவுரையாற்றினர்.
Post A Comment:
0 comments so far,add yours