சர்வதேச சிறுவர்தினத்தினை முன்னிட்டு பெரியநீலாவணை சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை தொடர்மாடியில் நடைபெறும் இலவசவகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களின் சிறுவர்தின நிகழ்வும் சிறுவர் விளையாட்டுப்போட்டியும் 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை செஞ்சிலுவைச் சங்கத் தொடர் மாடிப் பிரதேசத்தில் ஊடகவியலாளர் சா .நடனசபேசன் தலைமையில் இடம்பெற்றது.
சமூக செயற்பாட்டாளர் உமாச்சந்திரன் அவர்களின் முயற்சியினால் தரம் 1 தொடக்கம் தரம் 10 வரை அனைத்துப் பாடங்களும் இலவசமாக நடைபெற்று வருகின்றன. இம் மாணவர்களை சந்தோசப்படுத்தும் நோக்கில் இவ்விளையாட்டு விழா நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அதிதிகாளாக பெரியநீலாவணை சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஆலோசகர் சந்திரசேகரம் ஓய்வுநிலை பொறியியலாளர் சர்வானந்தா சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் விமல்ராஜ் மற்றும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது
இதன்போது பலூன் உடைத்தல் யானைக்குகண்வைத்தல் கயிறுஇழுத்தல் சாக்கோட்டம் முதியோர்களுக்கான பலூன் உடைத்தல் பெற்றோர்களுக்கான கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
Post A Comment:
0 comments so far,add yours