(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

டாக்டர் ஜலீலா முஸம்மில் எழுதிய "தூரிகை வரையும் மின்மினிகள்" ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை (28) மாலை 3:30 மணிக்கு ஏறாவூர் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் நடைபெறும். 

ஏறாவூர் கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.ஐ.எம்.எம். மஹ்பூழ் தலைமையில் நடைபெறும் இந் நூல் வெளியீட்டு விழாவுக்கு ஏறாவூர் பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.

நிகழ்வில் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில், உதவி பிரதேச செயலாளர் ஏ.சீ. அஹமட் அப்கர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக், காத்தான்குடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷேக் எஸ்.ஏ.எம்.நழீம் (நளீமி), ஏறாவூர் பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சி.எம். றிஸ்வான் (மதனி), கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷேக் எம்.எச்.எம். நியாஸ் (நளீமி), ஏறாவூர் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷேக் ஜவாஹிர் (பலாஹி), ஊடகவியலாளர், செய்தியாசிரியர், பல்துறைக்கலைஞர், கலைச்சுடர் எம்.எஸ்.எம். ஸாகிர், மின்னல் வெளியிட்டகப் பணிப்பாளர் நாவலாசிரியர் கவிஞர் அஸீஸ் எம். பாயிஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் ஓய்வு நிலைப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் நஸீரா எஸ். ஆப்தீன், சாய்ந்தமருது கமு/கமு/ மழ்ஹறுஸ் ஷம்ஸ் மகா வித்தியாலய அதிபர் றிப்கா அன்சார்,  மட்டக்களப்பு அஞ்சற்பயிற்சிக் கல்லூரி போதனாசிரியர் கே. பாத்திமா ஹஸ்னா, கொழும்பு முத்தமிழ் கலசம் இதழாசிரியர் கவிதாயினி வஃபிரா வஃபி, ஏறாவூர் ஓய்நிலைக் கோட்டக்கல்வி அதிகாரி கவிமணி எஸ். ஏ. றஸாக் (கனல் கவி) ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொள்வர்.

நிகழ்வை அறிவிப்பாளர்
ஜனாப் எம். ஐ. இஸ்ஸத் தொகுத்து வழங்குவார்.

எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கல்விமான்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும்  நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours