சாதாரண தமிழ் மக்கள் மாத்திரமல்லாது அரசினுடைய நிகழ்ச்சி நிரலுக்கு உட்படாத
எவரும், அது நீதிபதியாகவே இருந்தாலும் இந்த நாட்டில் வாழவோ, தங்களுடைய
கருமங்களை மேற்கொள்ளவோ முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு நீதி கோரி நேற்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்றத்தின் முன்பாக இடம்பெற்ற சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசினுடைய நேரடியானதும் மறைமுகமானதுமான அச்சுறுத்தல்களால் இந்த நட்டிலே இருக்க முடியாது வெளியேறிய மரியாதைக்குரிய முல்லைத்தீவு நீதிபதி அவர்களுக்கு நீதி கோரியும், அவருக்கு இழைக்கப்பட்ட செயற்பாடுகளுக்கு எமது எதிர்ப்பினைக் காண்பிக்கும் முகமாகவும் சட்டத்தரணிகளாகிய நாங்கள் ஜனநாயக வழியில் உயர்நீதிமன்ற வளாகத்திற்கு முன்னாள் போராடிக்கொண்டிருக்கின்றோம்.
இந்த போராட்டத்தின் வாயிலாக நாங்கள் இந்த அரசுக்கும், சர்வதேசத்திற்கும் விடுக்கும் செய்தி என்னவென்றால் இலங்கையில் நீதித் துறையின் சுதந்திரம் கடந்த காலங்களை விட தற்போது இன்னும் மோசமாகி அதளபாதாளத்திற்குள் விழுந்திருக்கின்றது. நீதிமன்றங்கள் முற்றுமுழுதாக அரசியல் செல்வாக்கிற்கு உட்பட்டு காணப்படுகின்றது. சாதாரண தமிழ் மக்கள் மாத்திரமல்லாது அரசினுடைய நிகழ்ச்சி நிரலுக்கு உட்படாத எவரும், அது நீதிபதியாகவோ அல்லது நீதித்துறை சார்ந்த எந்தவொரு உத்தியோகத்தராகவோ அல்லது எவராக இருந்தாலும் இந்த நாட்டில் வாழவோ, தங்களுடைய கருமங்களை மேற்கொள்ளவோ முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்
எனவே ஈழத்தில் அரங்கேறிய இன்படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை இனியும் காலம் தாமதிக்காமல் ஒரு சர்வதேச விசாரணையை நடத்தினால் மாத்திரம் தான் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி கிடைக்கும். அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கைக்குள்ளே நடைபெறக்கூடிய எத்தகைய விசாரணைகளும் அது உள்ளக விசாரணையோ, கலப்பு விசாரணையோ அவை எதுவுமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதியைப் பெற்றுத் தராது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்
எனவே நாங்கள் இப்போராட்டத்தின் மூலம் மீண்டும் வலியுறுத்துவது என்னவெனில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு நீதி கிடைக்க வேண்டும். அவருக்கு அச்சறுத்தல் விடுத்தவர்கள் யார் என்பது கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே என்று தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours