(எம்.எம்.ஜெஸ்மின்)
வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் களுத்துறை மாவட்டம் மத்துகம கல்வி வலயத்திற்குட்பட்ட கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்திற்கு 3 கழிவறைகள் மற்றும் ஒரு குளியலறைகள் உட்பட பொதுத்தேவை தொகுதியினை புணர் நிர்மாணம் செய்து அதனை கையளிக்கும் நிகழ்வு பாடசாலைஅதிபர் தலைமையில் இடம்பெற்றது
இப் பொதுத்தேவை தொகுதியானது அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள லக்ஷ்மன ஐயர் சசிதரன் குடும்பத்தின் நிதி அனுசரணையில் வன்னி ஹோப் நிறுவனத்தின் ஏற்பாட்டில் புணர் நிர்மாணம் செய்யப்பட்டது. இவ் நிகழ்வில் வன்னி ஹோப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் பணிப்பாளரும் செயலாளருமான வைத்தியர் மாலதி வரன், வன்னி ஹோப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் ஸ்தாபக உறுப்பினர் கந்தகுமார் அவர்களும், வன்னி ஹோப் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
இவ் பாடசாலையில் 500ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்வதோடு 30 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours