நூருல் ஹுதா உமர் 

கிழக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளராக கடைமையாற்றிய மாளிகைக்காட்டு பிரதேசத்தை சேர்ந்த பொறியியலாளார் யூ. எல். ஏ. நஸார் இலங்கை பொறியியல் சேவையின் விசேட தரத்திற்குப் பதவியுயர்வு பெற்று பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் தொழிநுட்பம் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் விஞ்ஞான மானி பட்டத்தை சிவில் துறையில் பெற்ற இவர் இலங்கைப் பொறியியலாளர் நிறுவனத்தின் பட்டயப் பொறியியலாளர் ஆவார். இலக்கை பொறியியல் சேவையில் 26 வருட காலத்திற்கு மேலான சேவை அனுபவத்தினை கொண்ட பொறியியலாளர் யூ.எல்.ஏ. நஸார் நிர்மாண முகாமைத்துவத்தில் பட்டப்பின் படிப்பினை மேற் கொண்டவராவார்.

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்ற இவர் கிழக்கு மாகாணத்தில் நீர்ப்பாசனத் துறை அபிவிருத்திற்கு அயராத முயற்சியுடன் பணியாற்றியவர் என்பதுடன் விவசாய அபிவிருத்தி மூலம் கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த முழு முயற்சிகளையும் அர்ப்பணித்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours