(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் ஆத்மீகத் தலைவர் சங்கைமிகு இமாம், ஷெய்ஹ், ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் அல் ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் மௌலானா (வாப்பா நாயகம்) தலைமையில் கடந்த 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெலிகம பைத்துல் பரக்காஹ் இல்லத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் ஏராளமான நபி நேசர்கள் உட்பட இந்தியா, டுபாய், கட்டார், குவைத், மலேசியா, சிங்கப்பூர், சவூதி, லண்டன் உட்பட பல நாடுகளில் இருந்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
தமிழ்நாடு ஜமாஅத்துல் (ஜம்இய்யதுல்) உலமா பொதுச்செயலாளர், டாக்டர் மௌலவி அன்வர் பாதுஷா (உலவி), சென்னை சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவர் டாக்டர் ஷெகு அப்துல்லாஹ் ஜமாலி, மௌலவி முஸ்தபா (மஸ்லாஹி) ஆகியோர் நிகழ்வில் சிறப்புரையாற்றினர்.
Post A Comment:
0 comments so far,add yours