அன்னார் மட்டக்களப்பில் முனைக்காடு என்ற கிராமத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் திருகோணமலை பதுளை ஆகிய நகரங்களில் சேவையாற்றிய பின்னர் கல்லடி மட்டுநகரை வசிவிடமாக கொண்டு மட்டக்களப்ப வின்சென்ட் மகளிர் பாடசாலையில் ஓய்வு பெறும்வரையும் அத்துடன் மட்டக்களப்பில் பல பாடசாலைகளிலும் சேவை ஆற்றியிருந்தார்கள். பின் நாட்களில் கனடா றொரொன்றோவில் வசித்து வந்த வேளையில் 13.10.2015 இல் இறைபதம் எய்தினார்கள்.
அன்னாரின் எட்டாவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு பெரிய நீலாவணையில் சுனாமி வீட்டு திட்டத்தில் நடை பெறும் சிறுவர்களுக்கான இலவச மாலை நேர பாடசாலை மாணவர்கள் 165 பேருக்கும் அவர்களை நல்வழியில் பயிற்றுவிக்கும் 15 ஆசிரியர்கள் மாடிதிட்டத்தில் வசிக்கும் 20 ஆதரவற்ற முதியவர்களுக்கும் மதிய போசன விருந்தை வழங்குவதில் லண்டனிலும் கனடாவிலும் வசிக்கும் அன்னாரின் குடும்பத்தினர் பெருமிதம் அடைகின்றார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours