அரசாங்கம் நூலகங்களுக்கு பெருந்தொகைப் பணத்தை செலவு செய்கின்றது. தினசரிப் பத்திரிகைகள், புத்தகங்கள், நூலகக் கணனி மயப்படுத்தல் உள்ளிட்ட நூலகத் தேவைக்காக அரசாங்கமானது நூலகங்களுக்கு பணத்தை எவ்வாறு செலவு செய்கின்றது என மண்முனை தென் எருவில் பிரதேச சபையின் செயலாளர் ச. அறிவழகன் தெரிவித்தார்.
தேற்றாத்தீவு பொது நூலக வாசகர் வட்டமும் பொது மக்களும் இணைந்த நடாத்திய தேசிய வாசிப்பு மாத சிறப்பு நிகழ்வானது கடந்த சனிக்கிழமை (28-10-2023) காலை 9.30 மணியளவில் தேற்றாத்தீவு கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலய முன்றலில் வாசகர் வட்டத் தலைவர் செ. பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் களுதாவளை பிரதேச சபையின் செயலாளர் ச. அறிவழகன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வாசிப்பு மாத நிகழ்வுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கி வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் சட்டத்தரணி செல்வி க. துளசி, நூலகப் பொறுப்பாளர் திருமதி வசந்தி அகிலன், பிரதேச சபையின் முகாமைத்துவ உதவியாளர் திருமதி சுசிலா சுந்தரலிங்கம், தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலய அதிபர் திருமதி சௌந்தலா சுதாகரன், கவிஞர் தேனூரான் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
தேற்றாத்தீவு பொதுநூலக வாசகர் வட்டமும் பொதுமக்களும் இணைந்து தேசிய வாசிப்புமாத நிகழ்வுக்கான போட்டிகளை நடாத்தியது. இதன்போது விவாவதம், பேச்சு, கவிதை, சிந்துநடைக்கூத்து உட்பட 75 போட்டிகளை மாணவர்கள் மத்தியில் நடாத்தியது. இதன்போது வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கப்பட்டது. தேற்றாத்தீவு மகாவித்தியாலயம், தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலய மாணவர்களினால் தேனருவி கையெழுத்துச் சஞ்சிகை கோர்ப்புச் செய்யப்பட்டு பிரதேச சபையின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது விசேட அம்சமாகும். கிராம பொதுமக்கள் மூவரினால் நூலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது.
சிறந்த தினசரி வாசகர் மற்று வீட்டில் நூலகம் வைத்திருந்தவருக்கும் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours