(கனகராசா சரவணன்;)


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மரம் ஒன்றை வெட்டுவதற்காக மரத்தில் ஏறி மரக்கிழைகளை வெட்டிக் கொண்டிருந்த  ஒருவர் மரத்தில் இருந்து தவறி நிலத்தில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (2) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனா.

மாவடிமுன்மாரி 40ம் கொலனியைச் சேர்ந்த 35 வயதுடைய தர்மலிங்கம் லக்ஸ்மன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாவடி முன்மாரிபகுதியில் உள்ள மரம் ஒன்றை வெட்டிவுதற்காக சம்பவதினமான இன்று காலை 10 மணிக்கு மரத்தில் ஏறி மரக்கிழைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது மரத்தில் இருந்து தவறி வீழ்தததையடுத்து சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனாவைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதா பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours