(எம்.ஏ.றமீஸ்)
பாலமுனை பிரதான வீதி அருகில் உள்ள இரு பெரும் மரங்களை வெட்டி அப்புறப் படுத்துமாறு பல முறை கோரிக்கை விடுத்த போதிலும் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் இடம்பெறாமல் இருப்பது தமக்கு மிகுந்த கவலையளிக்கின்றது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய காரியாலயத்திற்கு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பல முறை இவ்விடயம் தொடர்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் இம்மரங்கள் இதுவரை வெட்டப்பட்டு அப்புறப் படுத்தப்பட வில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளின் பிரதான வீதிகளில் இருந்த பெரு மரங்கள் வீழ்ந்து உயிர்ப்பலி உள்ளிட்ட பல்வேறான சேதங்கள் இடம்பெற்று வரும் இக்காலப் பகுதியில், கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக பாலமுனை பிரதான வீதியின் அருகில் விசாலமாாய் வளர்ந்து தற்போது இலைகள் கொட்டப்பட்டு இறக்கும் நிலையில காட்சி தரும் இப்பெரு மரங்களின் வேர்கள் வியாபித்து வளர்ந்துள்ளதனால் இதற்கு அருகில் உள்ள கட்டடங்கள் சிலவற்றின் பாகங்களுக்கு சேதம் ஏற்பட்டு வருவதாகவும் அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீரற்ற காலநிலை காரணமாக பாலமுனையினை அண்டிய ஒலுவில் பிரதேசத்தில் மின்னல் தாக்கத்தின் மூலம் ஒருவர் மரணித்ததுடன் மூவர் பாதித்துள்ள நிலையில் இப்பகுதியில் மாலை வேளையில் பலத்த காற்று வீசி வருவதனால் குறித்த இப்பெரு மரங்களை வெட்டி அகற்றி மக்கள் நலனில் அக்கறை கொள்ளுமாறு பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட தாப்பினருக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours