(ஏ.எஸ்.மெளலானா, யூ.கே.காலிதீன்)
கல்முனை மாநகர சபையில் ஊழியர்களாக கடமையாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் கே.கந்தசாமி, ஐ. இராமச்சந்திரன் ஆகியோருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று திங்கட்கிழமை (16) மாலை நடைபெற்றது.
மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், சுகாதாரப் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எம்.இஸ்ஹாக் ஆகியோர் குறித்த இரு ஊழியர்களினதும் நீண்ட கால அர்ப்பணிப்பு நிறைந்த உன்னத சேவைகள் பற்றி எடுத்துரைத்து, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours