(எஸ்.அஷ்ரப்கான்)
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு,
கிழக்கு இளைஞர்கள் அமைப்பு
ஜே.ஜே.பவுண்டேசன்,
"எமினன்ஸ்" கல்லூரி இணைந்து நடாத்திய தரம் ஐந்து இலவச புலமைப் பரிசில்
கருத்தரங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) காலை 8.30 முதல் 4.00 மணி வரை
கல்முனை "எமினன்ஸ்" கல்லூரி கேட்போர் கூடத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் வளவாளராக எம்.ஐ.முறாத் மற்றும் எம்.எச்.சதாத் ஆகியோர் பங்குபற்றினர்.
சுமார்
250 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்ற இக்கருத் தரங்கு நிகழ்வில்
அதிதிகளாக "எமினன்ஸ்" கல்லூரி பணிப்பாளர் எம்.ஏ.எம்.மாஹிர், "எமினன்ஸ்"
கல்லூரி பிரதி பணிப்பாளர் ஏ.எம்.சித்தி பர்ஸானா, கிழக்கு இளைஞர்கள்
அமைப்பின் பணிப்பாளர் நாயகம், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்
தானீஸ் ரஹ்மத்துல்லாஹ், கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் செயலாளர் எம்.ஆதிக்,
பிரதி தலைவர் ஏ.ஆர்.எம்.அஷ்ஹர், ஊடக ஆலோசகர் எஸ்.அஷ்ரப்கான் மற்றும்
உயர்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours