மட்டக்களப்பு சீலாமுனை பகுதியில் இருந்து நாவலடி பிரதேசத்திற்கு மட்டு.வாவி ஊடாக 6 பேர் பயணித்த தோணி வாவியில் கவிழ்ந்ததில் நீரிழ் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த நிலையில் இருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் நான்கு பேர் நீந்தி உயிர் தப்பியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) மாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டு.சீலாமுனையைச் சேர்ந்த 19 வயதுடைய தவசீலன் கிருசாந்தன், மாமாங்கத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பிரபாகரன் பிருந்தயன் ஆகிய இருவருமே இதன்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.மட்டு.தலைமையக பொலிஸ் பிரிவு சீலாமுனை மாமாங்கத்தை சேர்ந்த இளைஞர்கள் 6 பேர் டிக்ரொக் வீடியோ தரவேற்றம் செய்வதற்காக சம்பவதினமான இன்று காலை 11 மணியளவில் சீலாமுனையில் இருந்து தோணியில் வாவியில் பிரயாணித்து நாவலடிக்கு சென்றுள்ளனர்.

அங்கு வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துவிட்டு மீண்டும் சீலாமுனைக்கு தோணியில் பிரயாணித்தபோது தோணியின் கட்டப்பட குள்ளாதடி இரண்டாக உடைந்து தோணி வாவியில் கவிந்ததையடுத்து அனைவரும் நீரில் முழ்கியுள்ளனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours