(வி.ரி.சகாதேவராஜா)
யுனிசெப்(UNICEF)
அவுஸ்திரேலியா பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று முன்தினம்(10)
சம்மாந்துறை வலயத்தின் சொறிக்கல்முனை ஹோலி குறோஸ் மகா வித்தியாலயத்திற்கு
விஜயம் செய்தது.
அபிவிருத்திகான
விளையாட்டு (எஸ் 4 டி - S4D ) என்ற நிகழ்ச்சி திட்டத்தை மதிப்பீடு
செய்வதற்காக வருகைதந்த இந்த குழுவினர், விவியன் ஹாவே வொங்க் தலைமையில்,
பாடசாலைத் தரிசிப்பையும், கலந்துரையாடலையும் மேற்கொண்டார்கள்.
முன்னதாக
பாடசாலை அதிபர் அருட்சகோதரி சிறிய புஷ்பம் தலைமையில் குழுவினருக்கு
பாரம்பரிய மற்றும் பாண்ட் வாத்தியம் சகிதம் பெருவரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் குழுவின் தலைவர் விவியன் ஹாவே வொங்க் தலைமையிலான குழுவில்,
கிழக்கு
மாகாண யுனிசெப் பொறுப்பாளர் நிபால் அலாவுதீன், கிழக்கு மாகாண கல்வி
திணைக்கள பிரதிநிதி எஸ்..சஹீத் , இவ் வேலைத்திட்டத்திற்குப் பொறுப்பான
சம்மாந்துறை வலய உடற்கல்விப்பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.நசீர் உள்ளிட்ட
அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள் .
அங்கு அதிபர் ஆசிரியர்கள் மாணவர்களுடன் யுனிசெப் பிரதிநிதிகள் வேலைத்திட்டம் தொடர்பாக நேரடியாக கலந்துரையாடினர்.
மாணவர்களின் செயன்முறை விளக்க பயிற்சியையும் பார்வையிட்டார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours