தேசியமட்ட உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி வீராங்கனைகளைகள் மற்றும் இளவாலை சென் ஹென்றிஸ் வீரர்களை கௌரவிக்கும்  நிகழ்வு வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கினால் நேற்றைய தினம்(13) நடாத்தப்பட்டது.  


இதேவேளை வெற்றியிட்டிய மாணவர்கள் ஊர்வலமாக மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்து பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களினால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு, கே.கே.எஸ் வீதி வழியாக கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டனர். இதேவேளை தெல்லிப்பழை சந்தியை அண்மித்த சந்தர்ப்பத்தில் தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியாசாலை பாடசாலை சமூகம் உதைபந்தாட்டத்தில் சாதனை படைத்த இரு பாடசாலை மாணவர்களுக்கும் மலர்மாலை அணிவித்து கௌரவித்தனர்.

இதன் பின்னர் இரு பாடசாலைகளிலும் இடம்பெற்ற நிகழ்வுகளில் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். குறித்த இக் கௌரவிப்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் உள்ளிட்ட இரு கல்லூரிச் சமூகங்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours