வரலாற்று
பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ் குறிச்சி ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலய
தீமிதிப்பு மற்றும் வருடாந்த அலங்கார உற்சவம் இன்று(6) வெள்ளிக்கிழமை கதவு
திறத்தலுடன் ஆரம்பமாகின்றது.
தொடர்ச்சியாக
10 நாட்கள் திருவிழாக்கள் இடம் பெற்று எதிர்வரும் 15 ஆம் தேதி
ஞாயிற்றுக்கிழமை தீமிதிப்பு வைபவத்துடன் நிறைவடையும் என ஆலய பரிபாலன சபை
தலைவர் சீனித்தம்பி சுப்பிரமணியம் தெரிவித்தார்.
ஆலய பிரதம குரு கு. லோகேஷ் கிரியைகளை பகல் 12 மணிக்கும் மாலை 6:00 மணிக்கும் தினமும் நடத்த இருக்கிறார்.
8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பாற்குடபவனி இடம் பெற இருக்கிறது.
15ஆம்
தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் ஆலயத்திற்கு சொந்தமான மாவடி
வளவில் மஞ்சள் குளித்து பின்பு ஊர்வலமாக ஆலயத்துக்கு வந்து தீமிதிப்பு இடம்
பெறும்.
Post A Comment:
0 comments so far,add yours