( வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில்
பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள விநாயகபுரம் ஶ்ரீ சித்தி விநாயகர்
ஆலயத்துக்கான புதிய ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.
இவ்
ஆன்மீக நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் . சிந்தக அபேவிக்ரம
வேட்டி சால்வை சகிதம் கலாச்சார உடையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
மேலும்.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் திருக்கோவில்
பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்
வி..பபாகரன் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் மாவட்ட கலாசார
உத்தியோகத்தர் எஸ்.ஜெயராஜ் திருக்கோவில் பிரதேச செயலக கலாசார
உத்தியோகத்தர் திருமதிஎன்.நிசாந்தினி மற்றும் ஆலய தர்மகத்தாக்கள்
பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்
Post A Comment:
0 comments so far,add yours