நிந்தவூர் பிரதேசத்தின் முன்னணி விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான எமரெல்ட் விளையாட்டுக் கழக கிரிக்கெட் அணிக்கு புதிய சீருடை வழங்கி வைக்கப்பட்டது.
கழகத்தின் தலைவர் எம்.சீ.எம். றிபாய் தலைமையில், நிந்தவூர் றிலக்ஸ் கார்டனில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஆதம்பாவா சன்ஸ் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.எம் ஜெமீல் கலந்து கொண்டு புதிய சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் வை.எல். சுலைமாலெவ்வை, இளைஞர் சேவை சேவை அதிகாரி எம்.ஐ.எம் பரீட், நிந்தவூர் பிரதேச கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல். பைரூஸ், கிராம சேவை உத்தியோகத்தர் எம். சித்தீக், றிமோ ஐஸ் கிரீம் நிறுவன உரிமையாளர் எல்.எம். றிப்னாஸ், பெஸ்ட் மெடிக்கல் பார்மசி நிறுவன உரிமையாளர் ஏ.எம். காதர் உள்ளிட்ட கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours