உயர் நீதிமன்றம்,கிழக்கு மாகாண ஆசியர்கள் மற்றும் அதிபர்களிடமிருந்து COVID 19 நிவாரண நிதிக்கு வலுக்கட்டாயமாக சம்பள பட்டியலிருந்து கழிக்கப்பட்ட ஒருநாள் சம்பளத்தை மீளளிக்குமாறு உத்தரவு!
*கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு உயர் நீதிமன்ற வரலாற்று தீர்ப்புடன் வெற்றி களிப்பு மிக்க மகிழ்ச்சியான சர்வதேச ஆசிரியர் தின வாழ்த்துகள்!
*இலங்கை ஆசிரியர் சங்கம் ,
முன்னால் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர், பிரதம செயலாளர், மாகாண ஆளுநர் மற்றும் சட்டமாஅதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்கு 5.10.2023(வியாழக்கிழமை) அன்று விசாரணைக்கு எடுக்கபட்டபோது ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களிடமிருந்து அளவிடப்பட்ட ஒருநாள் சம்பளத்தை மீளளிக்குமாறு கௌரவ உயர் நீதிமன்றம் கிழக்கு மாகாண பிரதிவாதிகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளது.
*2020 ஆம் வருடம்
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மற்றும் பட்டிருப்பு கல்வி வலயங்களில் பெரும்பாலான ஆசிரியர்கள் அதிபர்களின் ஒருநாள் சம்பளம் வலுக்கட்டாயமாக சம்பள பட்டியலிருந்து கழிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொன்னுத்துரை உதயரூபன்
மாவட்ட செயலாளர் (மட்டக்களப்பு)
இலங்கை ஆசிரியர் சங்கம்
Post A Comment:
0 comments so far,add yours