(வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் வருடாந்த வாணி விழா நாளை(23)திங்கட்கிழமை கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ச.இ. ரெஜினோல்ட் எவ்.எஸ்.ஸி. தலைமையில் நடைபெற உள்ளது..

 ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் கலந்து ஆசி வழங்கவிருக்கிறார்.

கல்முனை ஆதாரவைத்திசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா  முரளீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்
ரி.ஜே.அதிசயராஜ், பிரதம குரு சிவஸ்ரீ கோபால நிரோஷன், உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ,கோட்டக் கல்விப்பணிப்பாளர் ச.சரவணமுத்து ஆகியோர் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொள்வார்கள்.

கல்முனை இ.கி.மகாவித்தியாலயத்தில்..

அதேவேளை கல்முனை ராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் வருடாந்த வாணி விழா
அதிபர் திருமதி விஜயசாந்தி நந்தபால தலைமையில் நாளை நடைபெற இருக்கிறது. ஆன்மீக அதிதியான மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் அருளுரை வழங்குவார்.

சம்மாந்துறையில்.

 சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் வருடாந்த வாணி விழா நாளை பணிமனையின் கணக்காளர் சீ.திருப்பிரகாசம் தலைமையில் நடைபெறவுள்ளது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours