(வி.ரி. சகாதேவராஜா)

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொக்கிஷம் மறைந்து விட்டது. அன்னாரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

இவ்வாறு அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன்,  

 மறைந்த முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான பொன் செல்வராஜாவின் மறைவுக்கான இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

அவர் 1994 காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக‌ தெரிவு செய்யப்பட்டு தமிழ் தேசியத்தின் பற்று உறுதி கொண்டு அக்கால கட்டங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள பேரினவாத சக்திகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட, பல  ஈன செயல்களை பாராளுமன்றத்திலே துணிச்சலாக அச்சமில்லாமல் உரத்துச் சொன்னவர்.

 தமிழ் மக்களின் ஏகோபித்த அன்பையும் பெற்றவர் .சிறந்த சிறந்த பேச்சாற்றலும் சிறந்த துணிச்சலும் மிக்கவர். பல அச்சுறுத்தல்களும் ஆயுத முனைகளும் தனக்கு வந்த பொழுதெல்லாம் தமிழ் தேசியத்தின் பால் பற்றுருதி கொண்டு செயல்பட்டவர்.  இதனால் மீண்டும் 2001 காலப்பகுதியிலும் 2010 காலப்பகுதியிலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களினால் பாராளுமன்றம் சென்றவர். ஒட்டுமொத்த கிழக்குத் தமிழர்களின் தமிழர்களின் தேசியக் குரலாக  கட்சியிப் பற்றாளர் ஆகவும் திகழ்ந்தவர்.
  அக்காலப் பகுதியில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின்  பல செயற்பாடுகளையும் முன்னெடுத்தவர். அன்னாரின் இழப்பு பேரிழப்பாகும்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours