(எஸ்.அஷ்ரப்கான்)

Metropolitan College East Campus இன் 5வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கல்முனை வளாகத்திலிருந்து பிரதான வீதியூடாக மாபெரும் வீதி ஊர்வலம் இன்று (28) இடம்பெற்றது. 

Metropolitan College East Campus இன் தவிசாளர் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில்  இடம்பெற்ற இந்த வீதி ஊர்வல ஆரம்ப நிகழ்வு Metropolitan College East Campus வளாகத்தில் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் தயாரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமானது.

இங்கு உரையாற்றிய சிராஸ் மீராசாஹிப், கடந்த 24 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட Metropolitan College Campus பல்வேறு சாதனை மாணவர்களை உருவாக்கியுள்ளது. அது போன்று கடந்த 2018 ஆம் ஆண்டு கல்முனை மெட்ரோபொலிட்டன் காலேஜ் ஈஸ்ட் கேம்பஸ் உருவாக்கப்பட்டது. இதில் கடந்த கால வரலாற்றைப் பார்க்கின்றபோது நாங்கள் சுமார் 2500 மாணவர்கள் கற்றுத் தேறி இருக்கின்றார்கள். அதுபோன்று ஆயிரம் மாணவர்கள் கியூ எஸ் பட்டம் பெற்று வெளியேறியிருக்கின்றார்கள். அதில் முழு  இலங்கையிலும் 10 கலாநிதி பட்டங்கள் வழங்கியது எமது மெட்ரோபொலிட்டன் காலேஜ் மட்டுமே.

அதுபோன்று வெளிநாட்டில் உள்ள மாணவர்களுக்கும் கற்கை நெறிகளை தொடர்வதற்கான வாய்ப்புகள் எமது நிறுவனத்தில் வழங்கப்படுகின்றது.

விசேடமாக இன்றைய நிகழ்வின்போது பல்வேறு பாராட்டுக்கள் கௌரவிப்புக்கள் மற்றும் பத்து மாணவர்களுக்கு பெறுமதி வாய்ந்த  புலமை பரிசில் திட்டம் ஒன்றினையும் நாம்  அறிமுகம் செய்ய இருக்கின்றோம். அதாவது சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான பத்து புலமை பரிசிலை  மாணவர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிட்டு இருக்கின்றோம் என்றும் கூறினார்.

பின்னர், கல்முனை Metropolitan College East Campus முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட
இவ்வூர்வலம் சாய்ந்தமருது பிரதேச அல்-ஹிலால் வீதியின் உள் வீதி வழியாகச் சென்று மீண்டும் கல்முனை நகரை வந்தடைந்தது.

இந்த வீதி ஊர்வலத்தில், இளைஞர்கள், கல்வி நிறுவனத்தின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours