நடந்து
முடிந்த தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் கல்முனை அல்-அஸ்ஹர்
வித்தியாலம் கல்முனை முஸ்லிம் கோட்டத்தில் இரண்டாவது தடவையாக முதலிடம்
பெற்றுள்ளது.
இப்புலமைப்பரீட்சையில்
163 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 25 மாணவர்கள்
வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
70 புள்ளிகளுக்கு மேல்
148 மாணவர்கள் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
புலமைப்பரீட்சையில்
சித்தியடைந்த மாணவர்களையும் அம் மாணவர்களுக்கு தரம் ஒன்று தொடக்கம் ஐந்து
வரை கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர்
ஏ.எச்.அலி அக்பர் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு பாராட்டி கெளரவித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours