(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கமைவாக கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து பாலமீன்மடு விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் நடமாடும் சேவையோன்றை ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தது.

இந் நடமாடும் சேவையானது பிரதேச செயலாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கமைவாக இடம்பெற்றதுடன் பாலமீன்மடு, திராய்மடு, அமிர்தகளி, புன்னைச்சோலை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 547 பேர் இதன்போது சமூகமளித்து தமது தேவைகளை பூர்த்தி செய்ததுடன், ஆலோசனைகளையும் பெற்றிருந்தனர்.

இதன்போது கண் பரிசோதனை,
சுகாதார வைத்திய சேவைகள், சுதேச மருத்துவ சேவைகள், தேசிய அடையாள அட்டை விண்ணப்பம் மற்றும் படமெடுத்தல், காணிப் பிணக்கு, நலன்புரி நன்மைகள் தொடர்பான சேவைகள், சமூக சேவை திணைக்களத்தின் பணிகள், மற்றும் ஆற்றுப்படுத்தல் நிலையத்தின் சேவைகள் என்பன இதன்போது இடம்பெற்றிருந்தது.

இவ் நடமாடும் சேவையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்கள், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், கிராம நிர்வாக உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours