மட்டக்களப்பு
மாவட்ட இளைஞர் விளையாட்டு விழாவின் சுவட்டு மைதான நிகழ்வுகள் நேற்று
முன்தினம் 29/10/2023 ஞாயிற்றுக்கிழமை மட். வெபர் விளையாட்டு மைதானத்தில்
நடை பெற்றது.
மட்டக்களப்பு
மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி
கலாராணி ஜேசுதாசனின் வழிகாட்டலில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி (மாவட்ட
செயலாளர்) திருமதி நிசாந்தி அருள்மொழி மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திரு
மாணிக்கப்போடி சசிகுமாரின் நெறிப்படுத்தல் மூலம் நடைபெற்றது.
இதில்
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் இளைஞர் சேவை அதிகாரி
த.சபியதாஸ் விளையாட்டு பயிற்சியாளர்கள் செல்வன் பிறைசூடி வதீஸ்க்குமார் ,
தே.அருள்நாதன் ,லக்ஸ்மிசுந்தரம் அகிலரூபன் ஆகியோர் மண்முனை தென் எருவில்
பற்று பிரதேச இளைஞர், யுவதிகளை நெறிப்படுத்தினர்.
அந்த
வகையில் 14 பிரதேச செயலக பிரிவிலிருந்தும் அதிகளவான இளைஞர் யுவதிகள்
ஆர்வத்துடன் கலந்து கொண்ட நிகழ்வில் இம்முறையும் ஒட்டுமொத்த மெய்வல்லுனர்
சம்பியனாக மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடிபிரதேசசெயலகம் தெரிவு
செய்யப்பட்டது.
ஒட்டுமொத்தமாக
33 முதலாமிடங்களையும்
03 இரண்டாமிடங்களையும்
03 மூன்றாமிடங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
இதில்
களுதாவளைஜோர்டன்இளைஞர்கழகம்
21 முதலாமிடங்களையும்
02 இரண்டாமிடங்களையும்
02 மூன்றாமிடங்களையும் பெற்றது.
செட்டிபாளையம்பாடசாலைஇளைஞர் கழகம்
12 முதலாமிடங்களையும்
களுதாவளைதிருஞானசம்பந்தர்குருகு லஇளைஞர்கழகம்
01 இரண்டாமிடங்களையும்
01 மூன்றாமிடங்களையும்
பெற்றுக்கொண்டுள்ளனர்
மேலும்,
20 வயதிற்குட்பட்ட பெண்கள் அணியினர் 4 X100M , 4 X400M செட்டிபாளையம்
மற்றும் களுதவளை பெண்வீராங்கனைகள் இணைந்து ஓடி பெற்று வெற்றி வாகை
சூடினர்.
மிகமுக்கியமாக
உயரம் பாய்தல் நான்கு போட்டி நிகழ்வுகளிலும் மற்றும் ஆண்கள் 4 அஞ்சல்
போட்டிகளிலும் களுதவளை வீரர்களே வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours