இலங்கை சதுரங்க சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த அம்பாறை மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சதுரங்க போட்டியில் சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மாணவி முபீன் பாத்திமா சபீலுல் லமாஹ் 9 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான போட்டியிலும், கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவி பளீல் பாத்திமா இல்மா 13 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான போட்டியிலும் 3 வருடங்களாக ஹெற்றிக் தொடர் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை சதுரங்க சம்மேளன ஏற்பாட்டில் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய யூத் சதுரங்க சம்பியன்சிப் போட்டிகள் அம்பாறை டீ.எஸ்.சேனநாயக சேனநாயக்கா தேசிய பாடசாலையில் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் நடைபெற்றது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள தேசிய மட்ட போட்டிக்கு இவ்விரு மாணவிகளும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Post A Comment:
0 comments so far,add yours