(வி.ரி. சகாதேவராஜா)
இதற்கென
e- kalvi Charity Fund Inc அமைப்பின் செயலாளர் இளங்கோ வினாசித்தம்பி
பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனைக்கு நேற்று முன்தினம் உத்தியோகபூர்வ
விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
அவர்
பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனையை மையமாகக் கொண்டு இயங்கும் e- kalvi யின்
zoom வகுப்புகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வானது பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.சிறீதரன் தலைமையில் இடம் பெற்றது.
இந்
நிகழ்வில் e- kalvi அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளரும் ஹோலிக்குறோஸ்
மகாவித்தியாலயத்தின் அதிபருமான அருட்சகோதரி சிறிய புஸ்பமும்
இணைந்திருந்தார்.
வலயத்தின் அதிபர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சிறீதரன், ஈ- கல்வி அமைப்பின் செயலாளரால் கௌரவிக்கப்பட்டார்.
இந்த
நிகழ்வைத் தொடர்ந்து கல்வி உத்தியோகத்தர்களுடன் செயற்கை நுண்ணறிவின் ( AI)
வளர்ச்சிக்கு துணை செய்யும் ஆர்டுயீனோ ( Arduino) பற்றி கல்வித்
திணைக்களத்துடன் இணைந்து எவ்வாறு ஆசிரியர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்க
முடியும் என ஆராயப்பட்டது. மாணவர்களை புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி
வழிநடாத்த தொழில்நுட்பம் எவ்வளவு அவசியம் எனவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் தரம் 5, 10, 11 மாணவர்களின் zoom வகுப்புகள், மாதிரிப் பரீட்சை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours